search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்"

    மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வருகிறது. #INDvAUS
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. அதன்பின் ஆஸ்திரேலியா இந்தியா வந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

    தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா இந்தியா வந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தது. புத்தாண்டையொட்டு சிட்னியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பியது.

    இதனால் இந்தய கிரிக்கெட் வாரியத்திடம் ஒருநாள் தொடரை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுத்தது. ஆனால், பிசிசிஐ அதை மறுத்துவிட்டது. இதனால் நியூசிலாந்து உடனான தொடரை தள்ளிப்பட முடிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் முடிவை நியூசிலாந்த ஏற்றுக் கொண்டது.

    இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடக்கிறது.
    எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, அதேபோல் நாங்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம் என ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.

    இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “எல்லா புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராகுவோமோ அதேபோல்தான் தயாராகினோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார்கள்.

    வீரர்களின் செயல்பாடு வியக்கத்தக்க பெருமை அளிக்கிறது. உலகக்கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வது கடுமையாக இருக்கப் போகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா வந்ததில் இருந்து எங்கள் அணி நம்ப முடியாத வளர்ச்சி அடைந்துள்ளது.

    விராட் கோலியை போன்ற வீரரை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி சிறப்பான வகையில் போட்டியிடும் உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது” என்றார்.
    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், தற்போது 5-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இது 2-வது சதமாகும். மேலும், நான்கு முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    முதல் ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்திருந்தார். 2-வது ஆட்டத்தில் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது போட்டியில் 104 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மொகாலியில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இன்றைய போட்டியிலும் சதம் அடித்தார்.
    ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதத்தால் இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெரேன்டர்ப் ஆகியோர் நீக்கப்பட்டு மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் லயன் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் கேஎல் ராகுல், சாஹல் நீக்கப்பட்டு ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே நேரம் அடிக்கக்கூடிய பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். அதனால் ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார்.

    அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். 19.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 26.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. இருவரும் நிலைத்து நின்று விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். சதம் அடித்த அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.



    நம்பிக்கையுடன் விளையாடிய ஹேணஸ்ட்காம்ப் 50 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர்  52 ரன்னில் முகமது ஷமி பந்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 36.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தில் மந்த நிலை ஏற்பட்டது.

    ஆஸ்திரேலியா 39.2 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. கடந்த போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஷ்டோன் டர்னர் 20 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 3 ரன்களில் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

    48-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா நான்கு பவுண்டரிகள் அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா 250 ரன்னைத் தாண்டியது.



    கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இந்தியா உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்துவிடும், உலகக்கோப்பைக்கான ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பரத் அருண் கூறுகையில், “ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக் கோப்பையில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் வீரர்கள் மாறுபட்ட சூழ்நிலையில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும்.

    ஏறக்குறைய அணியின் காம்பினேசன் முடிவு ஆகிவிட்டது. ஆனால் உலகக் கோப்பைக்கு முன் அனைத்து வாய்ப்புகளையும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடருக்கு முன் நாங்கள் என்ன விரும்புகிறமோ, அதில் மிகவும் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.

    தற்போது தொடர்ந்து இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததை பார்ப்பது மகிழ்ச்சியே. இது உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் முன்னேற்றம் அடைய ஏராளமான காரணிகளை கொடுத்துள்ளது.

    பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவது அவசியம். என்ன நடந்தாலும் நேர்மறையான கருத்தில் நிலையாக இருப்பது அவசியம். ஆஸ்திரேலியா தொடர் மிகச்சிறந்த அனுபவம்” என்றார்.
    டெல்லி கடைசி ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா 8 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டியில் 7954 ரன்கள் எடுத்துள்ளார். நாளைய போடடியில் 46 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்கள் அடித்த 8-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    நாளைய போட்டியின் சில சிறப்பம்சங்கள்:-

    இந்தியா இதுவரை ஆஸ்திரேயாவுக்கு எதிராக 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், 50 வெற்றிகளை பெற்ற 3-வது அணி என்ற பெருமையை பெறும். இதற்கு முன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 வெற்றிகளை பெற்றுள்ளது.

    இந்தியா வெற்றி பெற்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 50 வெற்றிகளை ருசிக்கும். மேலும் 50-க்கு மேல் வெற்றிகளை பெற்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

    பேட் கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை பதிவு செய்வார். டெஸ்டில் 94 விக்கெட்டுக்களும், ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டுக்களும், டி20 போட்டியில் 25 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.

    ஆரோன் பிஞ்ச் இன்னும் 14 ரன்கள் அடித்தால் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 1000 ரன்னைத் தொடுவார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சாஹல், புவனேஸ்வர் குமார் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜடேஜா, டோனி நீக்கப்பட்டுள்ளனர்.
    ×